அரசுக்குச் சொந்தமான பெரும் காப்பீட்டு நிறுவனமான “ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC)” நிறுவனமானது உலகளவில் மூன்றாவது வலுவான மற்றும் பத்தாவது மதிப்பு மிக்க ஒரு காப்பீட்டு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இது 2021 ஆம் ஆண்டு பிராண்ட் பைனான்ஸ் காப்பீடு 100 என்ற அறிக்கையின்படி கூறப்பட்டு இருக்கிறது.
இந்த வருடாந்திர அறிக்கையானது லண்டனிலுள்ள பிராண்ட் பைனான்ஸ் எனப்படும் ஒரு மதிப்பீட்டு ஆலோசனை நிறுவனத்தினால் வெளியிடப்படுகிறது.
இந்த அறிக்கையானது உலகளவிலான மதிப்பு மிக்க வலுவான காப்பீட்டு நிறுவனங்களை அடையாளம் காண்கிறது.
குறிப்பு
மிகவும் மதிப்பு மிக்க உலகளாவிய காப்பீட்டு நிறுவனம் – பிங் ஆன் காப்பீடு (Ping An Insurance), சீனா.
மிகவும் வலுவான உலகளாவிய காப்பீட்டு நிறுவனம் – போஸ்தே இத்தாலியானே (Poste Italiane), இத்தாலி.