பிராந்திய ஒருங்கிணைந்த கட்டளை வழங்கீட்டு வழி கட்டுப்பாட்டு மையங்கள்
May 21 , 2025 14 hrs 0 min 21 0
பெருநகர சென்னை மாநகராட்சியானது (GCC) விரைவில் பிராந்திய துணை ஆணையர் (RDC) அலுவலகங்களில் பிராந்திய ஒருங்கிணைந்த கட்டளை வழங்கீட்டு வழி கட்டுப்பாட்டு மையங்களை (RICCC) நிறுவ உள்ளது.
ஏற்கனவே ரிப்பன் கட்டிட வளாகத்தில் செயல்பட்டு வரும் மத்திய ஒருங்கிணைந்த கட்டளை வழங்கீட்டு வழி கட்டுப்பாட்டு மையத்தின் (ICCC) முக்கிய செயல்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் RICCC அமைக்கப்படும்.
இது நிகழ்நேரக் கண்காணிப்பு, சம்பவக் கண்காணிப்பு மற்றும் சில பகுப்பாய்வுத் தகவல்கள் உள்ளடக்கிய முகப்புப் பக்கங்கள் போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கு என்று ஆனதாகும்.
இந்த அமைப்பானது நீர் மட்டம், காற்றின் தரம் மற்றும் மழைப்பொழிவு போன்ற சுற்றுச்சூழல் மற்றும் குடிமை உணர்வுக் கருவிகளிலிருந்து பெறப்படும் ஒரு தரவைச் செயலாக்கி, உள்ளூர் அவசரநிலைகளுக்கான எச்சரிக்கைகளை வழங்கும்.
பொது குறை தீர்ப்பு (PGR) மென்பொருளை RICCC அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கும் இந்த மையங்களானது, பொதுமக்களின் குறைகள் மிகத் திறம்பட நிவர்த்தி செய்யப் படுவதை உறுதி செய்யும்.