மண்டல ஊரக வங்கிகளின் (Regional Rural Banks - RRB) ஆட்சேர்ப்புத் தேர்வானது ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளுடன் சேர்த்து 13 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழ், அசாமி, வங்க மொழி, குஜராத்தி, கன்னடம், கொங்கணி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது ஆகியவை இந்த 13 மொழிகளாகும்.
தற்பொழுது நாட்டில் 90 ஆயிரம் வங்கிப் பணியாளர்களுடன் 45 மண்டல ஊரக வங்கிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.