பாராளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததையடுத்து பதவியேற்ற ஒன்பது மாதங்களே ஆன பிரெஞ்சு நாட்டின் பிரதமர் பிரான்சுவா பேய்ரூ 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 08 ஆம் தேதியன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வாக்கெடுப்பில் 364 பிரதிநிதிகள் அரசாங்கத்தை எதிர்த்தனர் மற்றும் 194 பேர் அரசாங்கத்தை ஆதரித்தனர் இதனால் பிரெஞ்சு அரசியலமைப்பின் 50வது சரத்தின் கீழ் பேய்ரூ தனது ராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நம்பிக்கையிலா தீர்மானம் மூலமாக அல்லாமல், சர்ச்சைக்குரிய €44 பில்லியன் சிக்கன நிதி ஒதுக்கீட்டின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் நீக்கப்பட்ட முதல் நவீன கால பிரெஞ்சு பிரதமராக பேய்ரூ ஆனார்.
பேய்ரூவின் வெளியேற்றம் 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐந்தாவது பிரதமர் மாற்றத்தையும், 2017 ஆம் ஆண்டில் தொடங்கிய மக்ரோனின் அதிபர் பதவிக் காலத்திலான ஒட்டு மொத்த ஆறாவது மாற்றத்தையும் குறிக்கிறது.