14வது பிரிக்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் (STI) அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்திற்கு முன்னதாக, 16வது பிரிக்ஸ் STI மூத்த அதிகாரிகள் கூட்டம் (SOM) சென்னையில் நிறைவடைந்தது.
2026 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் பிரிக்ஸ் தலைமையின் கீழ் “Building for Resilience, Innovation, Cooperation and Sustainability” என்ற கருத்துருவில் இக்கூட்டம் நடைபெற்றது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) ஒருங்கிணைத்த இக்கூட்டத்தை சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) தொகுத்து வழங்கியது.
பிரிக்ஸ் STI பணிக்குழுக்கள், முன்னுரிமைப் பகுதிகள், பிரிக்ஸ் STI கட்டமைப்புத் திட்டம் மற்றும் பிரிக்ஸ் இளம் அறிவியலாளர்கள் மன்றம், இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான பரிசு போன்ற வரவிருக்கும் முயற்சிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது.