TNPSC Thervupettagam

பிரிக்ஸ் உச்சி மாநாடு 2026 – புதுடெல்லி பிரகடனம்

September 15 , 2026 13 hrs 0 min 15 0
  • 18வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு இந்தியாவின் தலைமையின் கீழ் புதுடெல்லியில் நடைபெற்றது.
  • இந்தியா தனது பிரிக்ஸ் தலைமைத்துவத்தை மீள்தன்மை (Resilience), கண்டுபிடிப்பு (Innovation), கூட்டுறவு (Cooperation) மற்றும் நிலையான தன்மை (Sustainability) ஆகிய நான்கு முக்கியத் தூண்களில் செலுத்தியது.
  • இம்மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதுடெல்லி பிரகடனம், உலகளாவிய வளர்ச்சி, அமைதி, சுகாதாரம், பருவநிலை, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை உள்ளடக்கியுள்ளது.
  • அணுஆயுத மோதல்களின் அதிகரித்து வரும் அபாயங்கள் குறித்து கவலை தெரிவித்த பிரிக்ஸ் தலைவர்கள், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) பாதுகாப்பின் கீழ் பொதுமக்கள் உள்கட்டமைப்பு மற்றும் அமைதியான அணுசக்தி வசதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
  • தொற்றுநோய்களுக்கான ஆரம்பகால எச்சரிக்கை அமைப்பு, பேரிடர் மேலாண்மை ஆரம்ப எச்சரிக்கை தரவு ஒருங்கிணைப்பு, தளவாட விநியோகச் சங்கிலி ஒத்துழைப்புச் சட்டகம் மற்றும் டிஜிட்டல் விவசாய வலையமைப்பு உள்ளிட்ட பிரிக்ஸ் முயற்சிகளை இந்தியா சுட்டிக்காட்டியது.
  • தொழில்நுட்பம் மற்றும் முக்கிய தாதுக்களை ஆயுதமாக்குவதற்கு எதிராக எச்சரித்த பிரதமர் நரேந்திர மோடி, இத்தகைய இடையூறுகள் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளையும் பகிர்ந்தளிக்கப்பட்ட வளர்ச்சியையும் பாதிக்கக்கூடும் என்று கூறினார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்