பிரிக்ஸ் தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பக் கூட்டம் 2026
August 20 , 2026 33 days 151 0
தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பங்களில் (ICTs) ஒத்துழைப்பிற்கான 7-வது பிரிக்ஸ் பணிக்குழு கூட்டத்தை புனே நடத்துகிறது.
இந்தக் கூட்டமானது இந்தியாவின் 2026 ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமையின் கீழ் நடைபெறுகிறது, மேலும் இது டிஜிட்டல் கொள்கை, தொலைத்தொடர்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துகிறது.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI), டிஜிட்டல் திறன்கள், தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் சூழல்கள் குறித்து இதில் விவாதங்கள் நடைபெறுகின்றன.
செயற்கை நுண்ணறிவு (AI), அடுத்த தலைமுறை தகவல்தொடர்புகள் மற்றும் தொழில்துறை 4.0 (Industry 4.0) பயன்பாடுகள் குறித்த பணிகளை எதிர்கால வலை அமைப்புகளுக்கான பிரிக்ஸ் நிறுவனம் ஆய்வு செய்தது.
12-வது தொலைத்தொடர்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னதாக, டிஜிட்டல் பிரிக்ஸ் மன்றம் மற்றும் கண்காட்சி 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று திட்டமிடப்பட்டுள்ளது.