இந்தியாவானது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 அன்று மூன்று நாட்கள் நடைபெறும் ஷெர்பாக்களின் அறிமுகச் சந்திப்புடன் பிரிக்ஸ் தலைமைத் துவத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
பிரிக்ஸ் என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றின் ஒரு சுருக்கமாகும்.
பிரிக்ஸ் நாடுகளின் அதிகாரப்பூர்வ வருடாந்திர மாநாடுகள் 2009 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகின்றன.
12வது பிரிக்ஸ் மாநாடானது ரஷ்யாவினால் காணொலி வாயிலாக நடத்தப் பட்டது.