TNPSC Thervupettagam

பிரிக்ஸ் தொழில் துறை அமைச்சர்கள் கூட்டம்

August 10 , 2026 3 days 48 0
  • இந்தியாவின் 2026 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் தலைமையின் கீழ், 10வது பிரிக்ஸ் தொழில் துறை அமைச்சர்கள் கூட்டம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நிறைவடைந்தது.
  • குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs), ஒளிமின்னழுத்தம் (photovoltaics), புத்தொழில் நிறுவனங்கள், புத்தாக்கம், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றில் தொழில்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கூட்டறிக்கையை இக்கூட்டம் ஏற்றுக் கொண்டது.
  • பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே MSME சூழலமைப்பை வலுப்படுத்துவதற்காக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SME) பணிக்குழுவில் ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • சூரிய ஆற்றலில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஒளிமின்னழுத்தத் தொழில் தொடர்பான பிரிக்ஸ் பணிக்குழுவிற்கான குறிப்பு விதிமுறைகள் மற்றும் செயல் திட்டம் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்பட்டன.
  • புத்தாக்கம் சார்ந்த வளர்ச்சி மற்றும் புத்தொழில் நிறுவனங்களை ஆதரிப்பதற்காக பிரிக்ஸ் காப்பக வலையைமைப்பு மற்றும் பிரிக்ஸ் புத்தொழில் நிறுவனப் புத்தாக்க நிதியத்தை இந்தியா முன்மொழிந்தது.
  • புதிய தொழில்துறைப் புரட்சிக்கான பிரிக்ஸ் கூட்டாண்மையின் (PartNIR) வாயிலாக "மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்காக உருவாக்குதல்" என்ற கருத்துருவின் கீழ் இக்கூட்டம் நடைபெற்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்