பிரிக்ஸ் நாடுகளின் நில மறுசீரமைப்பு கூட்டாண்மை 2025
April 24 , 2025 123 days 157 0
வேளாண்மை குறித்த பிரிக்ஸ் அமைப்பின் செயற்குழுவின் இரண்டாவதுக் கூட்டம் ஆனது பிரேசிலின் தலைநகரில் நடைபெற்றது.
உணவுப் பாதுகாப்பு, நிலையான வேளாண் உற்பத்தி மற்றும் தரமிழந்தப் பகுதிகளின் மறுசீரமைப்பு ஆகிய களங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய முயற்சிகள் குறித்து விவாதிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிலத் தரமிழப்பு, பாலைவனமாக்கல் மற்றும் மண்வள இழப்பு ஆகிய சிலவற்றினை நிவர்த்தி செய்வதற்காக என அக்குழு "பிரிக்ஸ் நில மறுசீரமைப்பு கூட்டாண்மையை" தொடங்கியுள்ளது.
அறிவியல் பூர்வத் தீர்வுகள் மற்றும் சில புதுமையான நிதிசார் செயல்முறைகளின் அடிப்படையில், தரமிழந்த நிலத்தை மீட்டெடுப்பது, மண் வளத்தினைப் பாதுகாப்பது மற்றும் நீர் வளங்களை மிகவும் திறம்படப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைப்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.
இந்தக் கூட்டாண்மையானது உலகின் தெற்கு (வளரும்) நாடுகளை ஒரு மையமாகக் கொண்டு, நீண்டகால மறுசீரமைப்பு உத்திகளில் அரசாங்கங்கள், தனியார் துறை மற்றும் உள்ளூர்ச் சமூகங்களை ஈடுபடுத்த முயல்கிறது.