பிரிக்ஸ் நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் 2025
June 10 , 2025 199 days 207 0
11வது பிரிக்ஸ் (BRICS) பாராளுமன்ற மன்றம் ஆனது பிரேசிலின் பிரேசிலியா நகரில் சமீபத்தில் நிறைவடைந்தது என்பதோடு இதில் பிரிக்ஸ் அமைப்பின் 10 உறுப்பினர் நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
விரிவாக்கப்பட்ட இந்த BRICS மன்றத்தில் தற்போது இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியா ஆகியவை அடங்கும்.
இந்தியா இந்த மன்றத்தின் போது, அடுத்த ஆண்டு நடத்தப்பட உள்ள 12வது பிரிக்ஸ் பாராளுமன்ற மன்றத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றது.