18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் புதுடெல்லி பிரகடனம், மனநலத்திற்கான சிறப்பு மையங்களின் (Centres of Excellence) வலையமைப்பிற்கு ஆதரவளித்துள்ளது. இதில் பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸ் (NIMHANS) நிறுவனம் ஒருங்கிணைப்பு மையமாகச் செயல்படும்.
இந்ந வலையமைப்பானது, பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே கூட்டு ஆராய்ச்சி, கொள்கை உரையாடல், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் சான்று அடிப்படையிலான மனநல உத்திகளை ஊக்குவிக்கும்.
ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பில் மனநல நலனை ஒருங்கிணைப்பதை ஆதரிப்பதற்காகப் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டாக இந்த வலையமைப்பை நிர்வகிப்பார்கள்.
இப்பிரகடனம், 'ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான பிரிக்ஸ் திட்டம்' மற்றும் 'ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஊக்குவிப்பிற்கான பிரிக்ஸ் வழிகாட்டி (2026–29)' ஆகியவற்றிற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், பிரிக்ஸ் சுகாதாரப் பிரிவின் கீழ் மரபுசார் மற்றும் நிரப்பு/ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான (TCIM) நிபுணர் பணிக்குழுவையும் பிரிக்ஸ் முன்மொழிந்துள்ளது.