பிரிக்ஸ் விளையாட்டு அமைச்சர்களின் கூட்டுப் பிரகடனம்
August 28 , 2026 24 days 132 0
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் விளையாட்டு அமைச்சர்கள் கூட்டத்தின் பிரிக்ஸ் விளையாட்டுக் கூட்டுப் பிரகடனத்தை ஒருமனதாக ஏற்றுக் கொண்டதன் மூலம் முடிவடைந்தது.
இக்கூட்டம் இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவம் 2026 இன் கீழ் நடைபெற்றது. இதில் இளைஞர் மேம்பாடு, உள்ளடக்கம், விளையாட்டுத் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.
விளையாட்டு அறிவியல், செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் மாற்றம் மற்றும் விளையாட்டு வீரர்களின் செயல்திறன் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக விளையாட்டு சார்ந்த தொழில்நுட்பம் குறித்த பணிக்குழு ஒன்றை பிரிக்ஸ் நாடுகள் முன்மொழிந்தன.
பிரிக்ஸ் விளையாட்டு உபகரண உற்பத்தி மாநாட்டிற்கான இந்தியாவின் முன்மொழிவு பரந்த ஆதரவைப் பெற்றது; முதல் மாநாடு 2026 ஆம் ஆண்டு நவம்பரில் உதய்பூரில் முன்மொழியப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் நாடுகளின் விளையாட்டுப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் 2026 ஆம் ஆண்டு அக்டோபரில் அகமதாபாத்தில் பிரிக்ஸ் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு விளையாட்டு விளக்கப் போட்டிகள் முன்மொழியப்பட்டுள்ளன.
இக்கூட்டம் பிரிக்ஸ் நாடுகளிடையே விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் பரிமாற்றங்கள், கூட்டுப் போட்டிகள் மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவற்றை மேம்படுத்தியது.