TNPSC Thervupettagam

பிரிக்ஸ் வேளாண்மை கட்டமைப்பு

June 19 , 2026 15 hrs 0 min 50 0
  • மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற்ற 16-வது பிரிக்ஸ் வேளாண்மை அமைச்சர்கள் கூட்டத்தில் 'பிரிக்ஸ் இந்தூர் பிரகடனம்' ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • இக்கூட்டமானது "மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு" என்ற கருத்துருவின் கீழ் நடைபெற்றது.
  • இப்பிரகடனம் உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து, வேளாண் வர்த்தகம், பருவ நிலையைத் தாங்கும் திறனுடைய வேளாண்மை மற்றும் டிஜிட்டல் வேளாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • விவசாயிகளின் விதை உரிமைகள் மற்றும் உள்நாட்டு அறிவாற்றலைப் பாதுகாப்பதற்காக 'விதை அமைப்புகளில் விவசாயிகளின் உரிமைகளுக்கான உலகளாவிய மன்றத்தை' தொடங்க இது முன்மொழிகிறது.
  • இது முன்மொழியப்பட்ட 'பிரிக்ஸ் தானிய பரிமாற்றத்தை' ஆதரிக்கிறது. மேலும், விதைகள் மற்றும் வேளாண் உள்ளீடுகளில் ஒத்துழைப்பிற்காக BRICS AGRIN (வேளாண் இடு பொருட்கள், மரபணு வளங்கள் மற்றும் தகவல் வலையமைப்பு) என்ற அமைப்பைத் தொடங்குவதையும் இது ஆதரிக்கிறது.
  • வேளாண்மையில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (DPI) விரிவுபடுத்தவும், டிஜிட்டல் வேளாண்மைக்கான பிரிக்ஸ் வலையமைப்பை நிறுவவும் இது அழைப்பு விடுக்கிறது. இதை ஆரம்பத்தில் டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT Delhi) ஒருங்கிணைக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்