பிரிவு 498A தொடர்பான வழக்குகளில் இரண்டு மாத 'அவகாச காலம்' அறிமுகப் படுத்தும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 2022 ஆம் ஆண்டு வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த அவகாச காலத்தில், எந்தக் கட்டாய நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதோடு மேலும் இந்த விவகாரம் குடும்ப நலக் குழுவிற்கு (FWC) பரிந்துரைக்கப் படுகிறது.
2025 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப்பட்ட ஷிவாங்கி பன்சல் மற்றும் சாஹிப் பன்சல் வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அவகாச காலம் ஆனது, நீதியை தாமதப்படுத்துவதாகவும் குற்றவியல் நீதி நிறுவனங்களின் சுயாட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
திருமணக் கட்டமைப்புகளில் பெண்களுக்கு எதிரான கொடுமையை நிவர்த்தி செய்வதற்காக 498A பிரிவானது முதலில் இயற்றப்பட்டது.
நீதிமன்றங்கள் ஆனது முன்னதாக முதற்கட்ட விசாரணை, கைது வழிகாட்டுதல்கள் (அர்னேஷ் குமார், 2014) மற்றும் பிணை ஆணை/ஜாமீன் தொடர்பான பாதுகாப்புகள் (சதேந்தர் குமார் அன்டில், 2022) போன்ற கருத்தாக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
இராஜேஷ் சர்மா (2017) வழக்கில் இதே போன்ற FWC மாதிரியானது, மனவ் அதிகாருக்கான (மனித உரிமைகள்) (2018) சமூக நடவடிக்கை மன்றம் என்ற வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வினால் ரத்து செய்யப்பட்டது.