TNPSC Thervupettagam

பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பதவி

January 12 , 2026 11 days 87 0
  • பிரேசில் நாடானது, 2026 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) அமைப்பின் தலைமைப் பதவியை இந்தியாவிடம் ஒப்புவித்துள்ளது.
  • இந்தியா 2026-ஆம் ஆண்டில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது.
  • இந்தியாவின் தலைமைப் பதவியானது பின்வரும் நான்கு முக்கியப் பகுதிகளில் கவனம் செலுத்துகிறது: மீள்தன்மை, புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை.
  • இந்தியாவானது சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களை மாற்றுவதற்குப் பதிலாக, உலகளாவிய நிர்வாகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவானது உலகளாவிய தெற்கு நாடுகளின் பிரசச்சினைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது மற்றும் ஒரு பலதுருவ உலக ஒழுங்கை ஊக்குவிக்கிறது.
  • பிரிக்ஸ் அமைப்பில் உலக மக்கள் தொகையில் சுமார் 49.5%, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40%, மற்றும் உலக வர்த்தகத்தில் 26% ஆகியவை அடங்கியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்