16 ஆம் நூற்றாண்டின் பிருந்தாவாணி வஸ்திரப் பட்டு ஜவுளி, 2027 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தினால் 18 மாதங்களுக்கு தற்காலிகமாக அசாம் அரசிடம் கடனாக வழங்கப்படும்.
இந்த ஜவுளி, நவ-வைணவ துறவி-சீர்திருத்தவாதி ஸ்ரீமந்த சங்கரதேவாவின் வழி காட்டுதலின் கீழ் நெய்யப்பட்டது மற்றும் கிருஷ்ணரின் வாழ்க்கை காட்சிகளை சித்தரிக்கிறது.
அசாம் மாநில அரசு தேவையான சுற்றுச்சூழல் தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு அருங்காட்சியகத்தை கட்டினால், பிரிட்டிஷ் அருங்காட்சியகம் இதனைக் கடனுக்கு வழங்க ஒப்புக் கொண்டது.