பிரெக்ஸிட்டை நினைவுகூரும் வகையில் புதிய 50 பென்ஸ் நாணயம்
January 31 , 2020 2112 days 893 0
பிரெக்ஸிட்டை நினைவுகூரும் வகையில் புதிய 50 பென்ஸ் (நாணய அலகு) நாணயத்தை பிரிட்டிஷ் அரசு வெளியிட்டுள்ளது.
இந்த நாணயத்தில் “எல்லா நாடுகளுடனும் அமைதி, செழிப்பு மற்றும் நட்பு” என்ற வெட்டெழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.
2020 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி முதல் அந்நாட்டின் தபால் நிலையங்கள், வங்கிகள் மற்றும் கடைகள் ஆகியவற்றிலிருந்து சுமார் 3 மில்லியன் நாணயங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.