பிரேசிலிய நாட்டின் ஹோல்லி மரம் மீண்டும் கண்டுபிடிப்பு
March 8 , 2024 521 days 386 0
இதுவரையில் எந்தவொரு உறுதிப்படுத்தப்பட்ட எந்தப் பதிவுமின்றி இருந்து சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு வடகிழக்குப் பிரேசிலில் பெர்னாம்புகோ ஹோல்லி எனப்படும் அரிய வகை பிரேசிலிய மர இனம் சமீபத்தில் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பெர்னாம்புகோ ஹோலி மரம் (லெக்ஸ் சேப்பிஃபார்மிஸ்) ஆனது 12 மீட்டர் (சுமார் 40 அடி) உயரம் வரை வளரக் கூடியது.
இந்த மரங்கள் அட்லாண்டிக் காடுகளின் பெரும்பாலான பகுதிகளில் காணப் படுகின்றன.
ஆனால் தற்போது அதன் அசல் வன உயிரியல் பகுதியானது சுமார் 7 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்பதோடு அவை பெரும்பாலும் சிறு சிறு பகுதிகளாகவே உள்ளது.
இதில் தொலைந்து போன இனங்களைத் தேடுதல் திட்டத்தின் மூலம் மீண்டும் கண்டு பிடிப்பதற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 25 "அதிகம் தேடப்படும்" தொலைந்து போன தாவர மற்றும் விலங்கு இனங்களில் ஹோல்லி மரமும் ஒன்றாகும்.
இது, 2017 ஆம் ஆண்டில் இந்த முயற்சி தொடங்கப்பட்டதில் இருந்து "மீண்டும் கண்டு பிடிக்கப் பட்ட" ஒன்பதாவது இனமாகும்.