"Wake Up and Smell the Deforestation: Coffee’s Destruction of Brazilian Forests and its Future" என்ற அறிக்கையானது காபி வாட்ச் என்ற காபி உற்பத்தியின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்களின் மீது கவனம் செலுத்தும் ஓர் இலாப நோக்கற்ற அமைப்பினால் வெளியிடப் பட்டது.
2001 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பிரேசிலின் அட்லாண்டிக் காடுகளில் 312,803 ஹெக்டேர் பரப்பிலான காடுகளின் இழப்புக்கு காபி சாகுபடி நேரடி காரணமாக அமைந்தது.
அட்லாண்டிக் காடுகள் ஒரு காலத்தில் சுமார் 1.2 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பில் பரவியிருந்தது ஆனால் இன்று அது 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
பிரேசில் உலகின் காபியில் சுமார் 40 சதவீதத்தை வழங்குகிறது ஆனால் காடுகள் இழப்பு இந்தத் தொழில்துறையின் நீண்டகால நம்பகத் தன்மையை அச்சுறுத்துகிறது.
ஈரப்பதத்தைச் சிறப்பாகத் தக்க வைத்துக் கொள்கிறது என்றாலும் காபி சாகுபடி பகுதிகளில் 1 சதவீதத்திற்கும் குறைவான வேளாண் சார் காடுகள் பயன்படுத்தப் படுகின்றன என்பதோடு மேலும் பிரேசிலின் அரபிகா நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு 2050 ஆம் ஆண்டில் இழக்கப்படலாம்.