TNPSC Thervupettagam

பிர்சா முண்டாவின் 125வது நினைவு தினம் - ஜூன் 09

June 16 , 2025 20 days 96 0
  • பழங்குடியினத் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பகவான் பிர்சா முண்டா அவர்களின் 125வது நினைவு தினம் ஆனது சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது என்பதோடு இது 'பாலிதான் திவாஸ்' என்றும் அழைக்கப்படுகிறது.
  • அவர் 1875 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதியன்று, தற்போதைய ஜார்க்கண்டில் உள்ள உலிஹாட்டு கிராமத்தில் பிறந்தார்.
  • அவரது பிறந்த நாள் ஆனது ஜன்ஜாதிய கௌரவ் திவாஸ் (பழங்குடியினர் பெருமை தினம்) என்று அனுசரிக்கப்படுகிறது.
  • 1800 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் "பெருங்கலகம்" அல்லது பெரும் கிளர்ச்சி என்று பொருள் படும் உல்குலனை வழி நடத்தியதற்காக பிர்சா முண்டா மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர்.
  • அவர் பழங்குடியினச் சமூகங்களால் 'தார்த்தி ஆபா' அல்லது 'பூமியின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார்.
  • 1900 ஆம் ஆண்டு ஜூன் 09 ஆம் தேதியன்று ராஞ்சி சிறையில் அவர் உயிரிழந்த போது அவரது வயது 25 ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்