ஹரியானாவில் 2025 ஆம் ஆண்டில் பிறப்பின் போதான பாலின விகிதம் (SRB) 923 ஆக பதிவாகியுள்ளது என்பதோடுஇது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக உயர்ந்ததாகும்.
2024 ஆம் ஆண்டில் 910 ஆக இருந்த பிறப்பின் போதான பாலின விகிதம் (SRB) 2025 ஆம் ஆண்டில் 923 ஆக அதிகரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் ஹரியானாவில் மொத்தம் 5,19,691 பிறப்புகள் பதிவு செய்யப்பட்டன.
பஞ்ச்குலா மாவட்டம் 971 உடன் மாநிலத்தில் அதிகபட்ச பிறப்பு விகிதத்தினைக் (SRB) கொண்டுள்ளது.
PC-PNDT சட்டம் (கருத்தரிப்பதற்கு முந்தைய மற்றும் பிறப்புக்கு முந்தைய பாலினம் அறிதல் நுட்பங்கள் சட்டம்) கடுமையாக அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.