பிற்படுத்தப்பட்டச் சமுகத்தின் மீதான சமூகம் மற்றும் கல்வி நிலை மீதான கணக்கெடுப்பு
May 10 , 2023 997 days 444 0
ஒடிசா மாநிலத்தில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டச் சமூகத்தில் உள்ள 210 சாதிகளைச் சேர்ந்த மக்களின் சமூகம் மற்றும் கல்வி நிலையைக் கண்டறிய ஒடிசா அரசு ஒரு கணக்கெடுப்பைத் தொடங்கி உள்ளது.
பீகாரைத் தொடர்ந்து இக்கணக்கெடுப்பை நடத்தும் இரண்டாவது மாநிலமாக ஒடிசா உள்ளது.
ஒடிசா அரசாங்கத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டச் சமூகத்தினருக்கு என்று கல்வித் துறையில் எந்த இட ஒதுக்கீடும் இல்லை.
மொத்த மக்கள் தொகையில் 54% உள்ள இதர பிற்படுத்தப்பட்டச் சமூகத்தினருக்கு வேலை வாய்ப்புகளில் 11% சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது.