TNPSC Thervupettagam

பிலிப்பைன்ஸ் புகாட் தீவு

September 16 , 2025 6 days 26 0
  • புகாட் என்பது புலாக்கன் மாகாணத்தில் உள்ள ஹகோனாயின் ஒரு பகுதியான மணிலா விரிகுடாவில் 7 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட ஒரு தீவாகும்.
  • இந்தத் தீவு அங்கட்-பம்பங்கா நதி டெல்டாவின் முகத்துவாரத்தில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது.
  • நிலத்தடி நீர் அதிகமாகப் பயன்படுத்தப் படுவதால் ஆண்டிற்கு சுமார் 11 சென்டிமீட்டர் நிலம் தாழ்ந்து வருவதால் புகாட் பகுதி நீரில் மூழ்கி வருகிறது.
  • பிலிப்பைன்ஸில் கடல் மட்டம் ஆண்டிற்கு 13 மில்லிமீட்டர் வரை உயர்ந்து வருகிறது, இது உலக சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
  • இங்கு மீன் குளங்களுக்காக சதுப்புநிலக் காடுகள் அழிக்கப் பட்டன என்ற நிலையில் இது அந்தத் தீவின் இயற்கை கடலோரப் பாதுகாப்புக் கவசத்தின் பெரும் பரவலைக் குறைத்தது.
  • புகாட் அடிக்கடி வெள்ளம், சூறாவளி மற்றும் புயல் பாதிப்புகளை எதிர்கொள்கிறது என்ற நிலையில் இது இடப்பெயர்ச்சி அபாயத்தை அதிகரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்