வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே நிர்வாகத்தின் (NFR) அலிப்பூர்துவார் பிரிவு, பிளாசரின் விரைவு தடா மாற்ற அமைப்பை (PQRS) பயன்படுத்தி 1,033 பாதை மீட்டர்கள் என்ற ஒற்றை நாளிலேயே இயந்திரமயமாக்கப்பட்ட அதிக தூரப் பாதைப் புதுப்பித்தல் நடவடிக்கையை அடைந்தது.
சுயமாக இயக்கப்படும் பாரந்தூக்கிகளை உள்ளடக்கிய PQRS அமைப்பு இரயில் தடங்களை விரைவாக மாற்ற அனுமதித்து, பராமரிப்புச் செலவுகள் மற்றும் கூடுதல் சரக்குப் போக்குவரத்தின் தேவையைக் குறைக்கிறது.
NFR ஆனது அதன் அதிகார வரம்பில் மொத்தம் 290.8 கிமீ பாதையை புதுப்பித்து வருகிறது என்ற ஒரு நிலையில்இதில் கதிஹார், அலிப்பூர்துவார் (மேற்கு வங்காளம்), ரங்கியா, லும்டிங் மற்றும் டின்சுகியா ஆகிய பிரிவுகள் அடங்கும்.
NFR ஆனது வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்காளத்தின் ஏழு மாவட்டங்கள் மற்றும் வடக்கு பீகாரின் ஐந்து மாவட்டங்களில் செயல்பாட்டு எல்லையைக் கொண்டுள்ளது என்ற நிலையில்இதன் தலைமையகமானது அசாம் கௌஹாத்தியின் மாலிகௌனில் உள்ளது.