பிளேசர் B.L. லேசெர்டே (சிற்றலை விண்மீன்) பூமியை நோக்கி செலுத்தப்படும் அதன் செறிவு மிக்க பாய்வுகளுக்குப் பெயர் பெற்றது.
தீவிரமான சூழல்களில் X-கதிர் உமிழ்வினை மிகவும் புரிந்து கொள்வதற்கான மையப் புள்ளியாக இது மாறியுள்ளது.
இந்த ஆய்வில், நாசாவின் ஆய்வு ஊடுகதிர் முனைவாக்க மானி ஆய்வுக் கருவி (IXPE) முக்கியப் பங்கு வகித்தது.
பிளேசர் பாய்வுகளில் ஊடுகதிர் உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள பல்வேறு வழி முறைகளை வெளிக்கொணர்வதற்கு நிலக் கட்டுப்பாடு அடிப்படையிலான தொலை நோக்கிகளுடன் இது ஒருங்கிணைக்கப்பட்டது.
சிற்றலை விண்மீன்கள்/பிளேசர்கள் ஒரு வகையான செயலில் உள்ள அண்ட மையம் ஆகும்.
அவை அவற்றின் மையங்களில் மிகப்பெரிய கருந்துளைகளை கொண்டுள்ளன.
இந்தக் கருந்துளைகள் ஒளியின் வேகத்திற்கு அருகிலான அளவில் நகரும் துகள்களின் பாய்வுகளை வெளியிடுகின்றன.
B.L. லேசெர்டே என்பது இந்தக் கண்டுபிடிக்கப்பட்ட முதல் சிற்றலை விண்மீன்களில் ஒன்றாகும் என்பதோடு மேலும் இது லேசெர்டா விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ளது.
ஒரு தீவிர ஈர்ப்பு விசைப் புலங்களில் பருப்பொருள் மற்றும் ஆற்றலின் நடத்தையைப் புரிந்து கொள்வதற்கு இதன் ஆய்வு மிக முக்கியமானதாகும்.