TNPSC Thervupettagam

பீகார் - இணைய வழி வாக்களிப்பு 2025

July 5 , 2025 14 hrs 0 min 27 0
  • நகராட்சித் தேர்தல்களின் போது கைபேசிகளைப் பயன்படுத்தி வாக்களிக்கும் முதல் மாநிலமாக பீகார் மாற உள்ளது.
  • தேர்தல் நடைபெற்ற மாவட்டங்களில் பாட்னா, பக்சர், ரோஹ்தாஸ் மற்றும் கிழக்கு சம்பாரண் ஆகியவை அடங்கும்.
  • வழக்கமான மின்னணு வாக்களிப்பு முறையுடன் சேர்த்து கூடுதலாக, இதில் சில வாக்காளர்கள் கைபேசி செயலி மூலம் வீட்டிலிருந்தே வாக்களிக்க முடிந்தது.
  • இந்த வசதியானது சாவடிகளுக்குச் செல்வதில் சிரமப்படும் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட்டது.
  • திருமதி பிபா குமாரி நாட்டின் முதல் இணைய வழி வாக்கைப் பதிவு செய்ததுடன், உள்ளாட்சித் தேர்தல்களில் இணைய வழி வாக்களிப்பு என்ற புதியதொரு வரலாறு உருவாக்கப் பட்டது.
  • அவர் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பக்ரிதயலில் வசிப்பவர்.
  • அதே மாவட்டத்தைச் சேர்ந்த முன்னா குமார் என்பவர் இணைய வழி வாக்களிப்பில் பங்கேற்ற முதல் ஆண் வாக்காளர் ஆவார்.
  • தகுதியுள்ள வாக்காளர்கள் E-SECBHR செயலியை நிறுவி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட கைபேசி எண்ணை அதனுடன் இணைக்கலாம்.
  • இந்த செயலியை மேம்பட்ட கணினி உருவாக்க மையம் (C-DAC) உருவாக்கியது.
  • இதில் இரண்டு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் மட்டுமே ஒரு கைபேசி எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைய அனுமதிக்கப் படுகிறார்கள் என்பதோடு மேலும் ஒவ்வொரு வாக்காளரின் சரிபார்ப்பும் வாக்காளர் அடையாள எண்ணை உள்ளிடுவதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
  • இதிலுள்ள மற்றப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர் சங்கிலி தொழில்நுட்பம், முக அடையாளப் பொருத்தம் மற்றும் வரியோட்ட ஆய்வு (ஸ்கேனிங்) போன்றப் பல்வேறு அம்சங்களைப் பயன்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்