பீகார், பூர்னியாவில் உள்ள விந்தணு வங்கி நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள பாலினம் பிரிக்கப்பட்ட விந்தணு வங்கி வசதியைப் பிரதமர் திறந்து வைத்தார்.
இந்த மையம் ஆனது இராஷ்ட்ரிய கோகுல் திட்டத்தின் கீழ் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தால் நிறுவப்பட்டுள்ளது.
இது 'இந்தியாவில் தயாரித்தல்' மற்றும் 'தன்னிறைவு பெற்ற இந்தியா' முன்னெடுப்புகளின் கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 'கௌசோர்ட்' என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
இந்த மையமானது, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் பாலினம் வாரியாகப் பிரிக்கப்பட்ட விந்தணுகளை உற்பத்தி செய்ய முடியும்.
84.27 கோடி ரூபாய் மத்திய ஆதரவுடன் அமைக்கப்பட்ட பூர்னியா விந்தணு வங்கி, இந்தியாவின் மிகப்பெரிய அரசாங்க விந்தணு நிலையங்களில் ஒன்றாகும்.
பாலின வாரியாகப் பிரிக்கும் தொழில்நுட்பம் 90% பெண் கன்றுப் பிறப்புகளை உறுதி செய்வதால், இது அதிக வருமானம் மற்றும் குறைந்தச் செலவுகளுடன் பால் துறை சார்ந்த விவசாயிகளுக்கு உதவுகிறது.