TNPSC Thervupettagam

பீகார் வண்டல் மேலாண்மைக் கொள்கை 2026

November 8 , 2026 6 days 85 0
  • 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விரிவான வண்டல் மேலாண்மைக் கொள்கையை அறிமுகப்படுத்திய முதல் இந்திய மாநிலமாக பீகார் உருவெடுத்து உள்ளது.
  • வெள்ளத்தைக் குறைப்பதற்கும் நதிகளை மீட்டெடுப்பதற்கும் பீகார் நீர் ஆதார மறுசீரமைப்பு மற்றும் வண்டல் மேலாண்மைக் கொள்கை 2026 ஆனது 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று அங்கீகரிக்கப்பட்டது.
  • நீரோட்டம் மற்றும் நதியின் கொள்ளளவை மேம்படுத்துவதற்காக கங்கை, கோசி, பாக்மதி, கம்லா-பாலன் மற்றும் கண்டகி போன்ற நதிகள் மீது இது கவனம் செலுத்துகிறது.
  • தேசிய நெடுஞ்சாலைக் கட்டுமானம் மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்களில் மீட்டெடுக்கப் பட்ட வண்டல், மணல் மற்றும் படிவுகளை மீண்டும் பயன்படுத்துவதை இக்கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நெடுஞ்சாலைத் திட்டங்களில் நதிகளில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்த பீகாருடன் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்களை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • நீர் வாழ்விடங்கள் மற்றும் நதி சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க கவனமாக தூர்வாரும் பணி தேவைப்படும் அதே வேளையில், நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கும் இந்தக் கொள்கை ஆதரவளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்