நாட்டில் உள்ள “புகழ்பெற்ற 17 சுற்றுலாத் தளங்கள் அரசாங்கத்தினால்” உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தளங்களாக மேம்படுத்தப் படவிருக்கின்றன. இவைகள் இதர சுற்றுலாத் தளங்களுக்கு ஒரு முன்மாதிரியாக செயல்படவிருக்கின்றன.
இந்த முன்னெடுப்பு இந்தியாவின் மென்சக்தி ஆற்றலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 2019 ஆம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.