புகைபிடிக்கும் பழக்கம் குறித்த தரவு
November 23 , 2021
1296 days
571
- புகைபிடிப்பிற்கு எதிரான ஒரு போராட்டத்தை மீண்டும் எழுப்புவதற்கான சர்வதேச ஆணையத்தின் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
- உலக வங்கி போன்ற மூல ஆதாரங்களில் இருந்து இரண்டாம் நிலை தரவுகளைப் பயன்படுத்தி இந்த அறிக்கையானது தயாரிக்கப்பட்டது.
- 16 முதல் 64 வயதுக்குட்பட்ட புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் எண்ணிக்கையில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
- புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவோர் விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
- சீனாவிலும் இந்தியாவிலும் 16 முதல் 64 வயதுக்குட்பட்டவர்களில் புகைபிடிக்கும் பழக்கம் உள்ள 500 மில்லியன் நபர்கள் உள்ளனர்.

Post Views:
571