TNPSC Thervupettagam

புகையிலை பொருட்கள் மீதான தடை

January 26 , 2026 14 hrs 0 min 18 0
  • ஒடிசா அரசு ஆனது ஜனவரி 23, 2026 அன்று குட்கா, பான் மசாலா மற்றும் அனைத்து புகையிலை மற்றும் நிக்கோடின் பொருட்களுக்கும் முழுமையான தடையை அறிவித்தது.
  • இந்தத் தடையானது, பொதி செய்யப்பட்ட மற்றும் பொதி செய்யப்படாத பொருட்களின் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு, போக்குவரத்து மற்றும் விநியோகத்தை உள்ளடக்கியது.
  • எந்தவொரு வடிவத்திலும் அல்லது பெயரிலும் விற்கப்படும் புகையிலை அல்லது நிக்கோடின் கொண்ட அனைத்து மெல்லக் கூடிய பொருட்களுக்கும் இந்தத் தடை பொருந்தும்.
  • இந்த நடவடிக்கை, உச்ச நீதிமன்றத்தின் நாடு தழுவிய குட்கா மற்றும் பான் மசாலா மீதான தடையை முழுமையாக நிறைவேற்றுவதை உறுதி செய்கிறது.
  • புகையிலை பொருட்கள் மீதான அதிக சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் கலால் வரிகள் பிப்ரவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்