புகையிலைக் கட்டுப்பாட்டிற்கான உலக சுகாதார அமைப்பின் விருது
June 2 , 2022 1163 days 537 0
புகையிலை நுகர்வைக் கட்டுப்படுத்தும் தனது சீரிய முயற்சிகளுக்காக ஜார்க்கண்ட் மாநிலமானது 2022 ஆம் ஆண்டிற்கான உலகப் புகையிலை எதிர்ப்புத் தின விருதிற்கு உலக சுகாதார அமைப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநில சுகாதாரத் துறையின் மாநிலப் புகையிலைக் கட்டுப்பாட்டுப் பிரிவானது, உலகப் புகையிலை எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருதைப் பெற உள்ளது.
தேசியப் புகையிலைக் கட்டுப்பாட்டு திட்டமானது ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இந்த மாநிலத்தில் புகையிலை உபயோகத்தின் பரவல் விகிதம் சுமார் 51.1 சதவீதமாக இருந்தது.
இதில் 48 சதவீதத்தினர் புகை பிடிக்காதவர்கள் ஆவர்.
2018 ஆம் ஆண்டிற்கான ஒரு அறிக்கையின்படி, இந்த மாநிலத்தில் புகையிலையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 38.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதில் 35.4 சதவீதத்தினர் புகை பிடிக்காதவர்கள் ஆவர்.