புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான தேசிய வாரம் – நவம்பர் 15/21
November 24 , 2020 1725 days 496 0
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகமானது இந்த வாரத்தை அனுசரித்தது.
இந்த வார அனுசரிப்பின் கருத்துரு, “எல்லா இடங்களிலும் மற்றும் ஒவ்வொரு சுகாதார மையத்திலும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்குமான தரம், சமத்துவம், கண்ணியம்” என்பதாகும்.
இதன் முக்கிய நோக்கம் புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் உயிர் வாழ்தல் மற்றும் அவை வளர்ச்சி அடைதலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகும்.
குழந்தை பிறந்த முதல் 28 நாட்கள் அந்த குழந்தை உயிர் வாழ்வதற்கான ஒரு முக்கியக் காலமாகக் கருதப் படுகின்றது.
இந்தியாவானது 2035 ஆம் ஆண்டிற்குள் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பை 1000 குழந்தைகளுக்கு 20 என்ற அளவிற்குக் குறைக்க இலக்கு ஒன்றை நிர்ணயித்துள்ளது.