மலேசியாவில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டின் போது FIFA ஒரு புதிய ASEAN கோப்பையை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்தது.
இந்தப் போட்டியானது FIFA கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ சர்வதேசப் போட்டிகளின் போது தேசிய அணிகள் போட்டியிட அனுமதிக்கும்.
உலகெங்கிலும் உள்ள குழுக்களைச் சேர்ந்த வீரர்கள் இந்தப் போட்டிக்கான தங்கள் தேசிய அணிகளில் சேரத் தகுதி பெறுவார்கள்.
போட்டியின் செயல்முறை மற்றும் அட்டவணையை இறுதி செய்ய FIFA ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு (AFC) மற்றும் பிற பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பினை மேற் கொள்ளும்.
இந்தப் புதிய ASEAN கோப்பை போட்டியானது தேசிய அளவில் கால்பந்து அணியை வலுப்படுத்துவதையும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான போட்டிப் பங்கேற்பினை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.