TNPSC Thervupettagam

புதிய CPI தொடரின் படி சில்லறை விலை பணவீக்கம்

February 17 , 2026 19 hrs 0 min 29 0
  • இந்தியாவின் சில்லறை விலை பணவீக்கம் ஜனவரி 2026 இல் புதிய நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) தொடரின் கீழ் 2.75% ஆக பதிவாகியுள்ளது (அடிப்படை: 2024 = 100).
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் (MoSPI) வெளியிடப்பட்ட இந்தத் தரவு, திருத்தப்பட்ட CPI கட்டமைப்பின் கீழ் வெளியான முதல் பணவீக்க மதிப்பீடாகும்.
  • புதிய CPI தொடர், முந்தைய அடிப்படை ஆண்டான 2012 ஐ மாற்றி வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்பு (2023–24) அடிப்படையாகக் கொண்டது.
  • CPI கணக்கீட்டுப் பொருட்களில் இப்போது 358 பல்வேறு விகிதப் பங்குகளைக் கொண்ட பொருட்கள் (முன்னர் 299) அடங்கும் என்ற நிலையில் இது மாறிவரும் நுகர்வு முறைகள் மற்றும் சேவைகளின் வளர்ந்து வரும் பங்கைப் பிரதிபலிக்கிறது.
  • புதிதாக சேர்க்கப்பட்டப் பொருட்களில் ஆன்லைன் ஒளிபரப்பு சேவைகள், கிராமப்புற வீட்டு வசதி, தூய்மையான எரிபொருள்கள் (CNG, PNG), உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்