முக்கியப் பொருளாதார குறிகாட்டிகளுக்கான அடிப்படை ஆண்டைத் திருத்துவதாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) அறிவித்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் தொழில்துறை உற்பத்திக் குறியீடு (IIP) 2022-23 என்ற புதிய அடிப்படை ஆண்டைக் கொண்டிருக்கும்அதே நேரத்தில் நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படை ஆண்டு 2024 ஆக திருத்தப்படும்.
CPI – 12 பிப்ரவரி 2026, GDP – 27 பிப்ரவரி 2026 மற்றும் IIP – 28, மே 2026 ஆகிய தேதிகள் என்ற வகையில் புதுப்பிக்கப்பட்ட தொடர்கள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.