பொதிகளுக்கான புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்த இந்திய பொதி நுட்ப ஆய்வு நிறுவனம் (IIP) ஆனது சமீபத்தில் அதன் பெங்களூரு மையத்தைத் திறந்துள்ளது.
இது இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல் படுகிறது.
இது மும்பையில் அதன் தலைமையகம் மற்றும் முதன்மை ஆய்வகங்களுடன் 1966 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
புதுமையான பொதி வடிவமைப்பு, சோதனை மற்றும் மேம்பாடு மூலம் ஏற்றுமதியை ஊக்குவிப்பதே அதன் முக்கிய நோக்கமாகும்.
IIP ஆனது ஆசிய பொதி நுட்பங்கள் கூட்டமைப்பின் (APF) ஒரு நிறுவன உறுப்பினராகும் என்பதோடுஉலகளாவியப் பொதி அமைப்புகளுடன் கூட்டுறவினை மேற்கொள்கிறது.