IUCN அமைப்பானது தற்போது 172,620 இனங்களைக் கண்காணித்தது, அவற்றில் 48,646 அழியும் அபாயத்தில் உள்ளது என்பதைக் குறிப்பிட்டு அதன் செந்நிறப் பட்டியலைப் புதுப்பித்துள்ளது.
ஹூட் சீல்கள்/நீர் நாய்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனத்திலிருந்து அருகி வரும் இனங்கள் என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன, அதே நேரத்தில் பிடரி மற்றும் யாழ் போன்ற வளைவுடைய நீர் நாய்கள் தற்போது அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனமாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.
புவி வெப்பமடைதல், கடல் போக்குவரத்து, தொழில்துறை மீன்பிடித்தல் மற்றும் எண்ணெய்ப் பிரித்தெடுத்தல் காரணமாக ஆர்டிக் நீர் நாய்கள் அதிகளவில் ஆபத்தில் உள்ளன.
பனிப் பகுதிகளைச் சார்ந்திருக்கும் நீர் நாய்கள் முக்கிய இனங்கள், மீன்களை உட் கொள்வதன் மூலமும் ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வதன் மூலமும் கடல் சுற்றுச் சூழல் அமைப்புகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
2016 ஆம் ஆண்டில் 44 சதவீதமாக இருந்த பறவை இனங்கள் எண்ணிக்கை சரிவு 61 சதவீதமாக குறைந்து வருவதுடன் பறவை இனங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
உலகளவில் மதிப்பிடப்பட்ட 11,185 பறவை இனங்களில், 1,256 இனங்கள் அல்லது 11.5 சதவீதம் தற்போது உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
மடகாஸ்கரில், புதிதாக 14 பறவை இனங்கள் அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதோடு, மேலும் மூன்று வெப்பமண்டலக் காடுகள் இழப்பு காரணமாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனமாக வகைப்படுத்தப் பட்டு உள்ளன.
பல தசாப்த கால வளங்காப்பு காரணமாக, 1970 ஆம் ஆண்டுகளில் இருந்து 28 சதவீத எண்ணிக்கை அதிகரிப்புக்குப் பிறகு பச்சை ஆமை இனங்கள் இனி அருகி வரும் இனமாகப் பட்டியலிடப்படவில்லை.