சமீபத்தில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோரின் சந்திப்பானது கார்ன்வாலில் (இங்கிலாந்து) நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது அட்லாண்டிக் சாசனம் தொடர்பான ஆவணங்கள் ஆய்வு செய்யப் பட்டு “புதிய அட்லாண்டிக் சாசனம்” என்று தலைப்பிடப்பட்ட ஒரு புதிய ஆவணம் கையெழுத்திடப் பட்டது.
மக்களாட்சியின் கொள்கைகளையும் அமைப்புகளையும் பாதுகாத்தல் மற்றும் அதன் அமைப்புகளை வலுப்படுத்தி அவற்றை ஏற்றுக் கொள்தல் போன்ற நோக்குடன், புதிய அட்லாண்டிக் சாசனமானது கையெழுத்தானது.
அட்லாண்டிக் சாசனம் என்பது 1941 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் (இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு) கையெழுத்தான ஒரு பிரகடனமாகும்.
இதில் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் அமெரிக்க அதிபர் ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
சமீபத்திய அட்லாண்டிக் சாசனமானது 1941 ஆம் ஆண்டு அட்லாண்டிக் சாசனத்தின் புதிய பதிப்பாகும்.