TNPSC Thervupettagam

புதிய அமைச்சரவைக் குழுக்கள்

July 23 , 2021 1466 days 610 0
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையானது வெவ்வேறு அமைச்சரவைக் குழுக்களை மாற்றியமைத்துள்ளது.
  • முக்கியமான அரசியல், பொருளாதார,  பாதுகாப்பு மற்றும் முதலீட்டு விவகாரங்கள் குறித்து இறுதி முடிவினை மேற்கொள்ளும் அமைப்பாக செயல்படும் வகையில் எட்டு அமைச்சரவைக் குழுக்கள் உள்ளன.
  • எனினும் முக்கிய அமைச்சர்களின் அதிகாரப் படிநிலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை.
  • பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்த  நிலையில் அரசின் இரண்டாவது அதிக அதிகாரமிக்க நபராக உள்துறை அமைச்சர் அமித் சா தொடர்ந்து செயல்படுவார்.
  • இவர் எட்டு அமைச்சரவைக் குழுக்களிலும் உறுப்பினராக உள்ளார்.
  • பிரதமர் நரேந்திர மோடி எட்டுக் குழுக்களில் ஆறு குழுக்களுக்கு தொடர்ந்து தலைமை தாங்குவார்.
  • அவை, நியமனங்கள், பொருளாதார விவகாரங்கள், அரசியல் விவகாரங்கள், பாதுகாப்பு, முதலீடு மற்றும் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்