UIDAI அமைப்பானது, திறன் பேசிகளுக்கான புதிய ஆதார் செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது என்பதோடுஇது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கப் பெறுகிறது.
இந்தச் செயலியானது, நேரடி நகல்களுக்கான தேவையை நீக்கி, குடிமக்கள் தங்கள் டிஜிட்டல் ஆதார் அட்டையை பாதுகாப்பாக உடன் கொண்டு செல்ல அனுமதிக்கிறது.
பல சுய விவர மேலாண்மை (ஒரு சாதனத்திற்கு 5 குடும்ப உறுப்பினர்கள் வரை), முக அங்கீகாரம், உயிரியளவியல் காப்புகள், QR குறியீடு பகிர்வு, இணையம் இல்லாத போதான (ஆஃப்லைன்) அணுகல் மற்றும் பயன்பாட்டு வரலாறு கண்காணிப்பு ஆகியவை இதில் அடங்கும்.
புதிய ஆதார் செயலியானது mAadhaar செயலியிலிருந்து பின்வரும் வகையில் வேறுபடுகிறது:
புதிய ஆதார் செயலி: தினசரி டிஜிட்டல் அடையாள அட்டைப் பயன்பாடு, குடும்பத் தரவு மேலாண்மை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட தரவுப் பகிர்வு.
mAadhaar செயலி: மின்-ஆதார் PDFகளைப் பதிவிறக்குதல், நேரடி அட்டைகளைப் பெற ஆணை செய்தல், மெய்நிகர் அடையாள அட்டைகளை உருவாக்குதல் மற்றும் கணக்கு விவரங்களைப் புதுப்பித்தல்.