TNPSC Thervupettagam

புதிய ஆயுதங்கள் மற்றும் ஆயுத அமைப்பு

August 19 , 2022 1081 days 494 0
  • பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஆனது நிபுண் கண்ணி வெடிகள், தரையிறங்கும் வகையிலான தாக்குதல் கலம் (LCA) இரண்டு புதிய ஆயுதங்கள் மற்றும் F-INSAS அமைப்பு ஆகியவற்றை இராணுவத்திடம் ஒப்படைத்தது.

F-INSAS அமைப்பு

  • F-INSAS என்பதன் விரிவாக்கம் ஒரு அமைப்பாகச் செயல்பட உள்ள எதிர்கால காலாட் படை அமைப்பு என்பதாகும்.
  • இது இந்திய இராணுவப் பிரிவுகளை நவீனமயமாக்க உதவும் வகையிலான உள் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும்.
  • இந்திய இராணுவத்தின் காலாட்படைப் பிரிவுகளின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பானது உருவாக்கப்பட்டது.
  • F-INSAS அமைப்பானது AK-203 தாக்குதல் ரக துப்பாக்கி வடிவில் அழிப்புத் திறனை உள்ளடக்கியது.
  • இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக AK-203 ஆயுதத்தினை இந்தியா தயாரிக்க உள்ளது.

நிபுண் படை எதிர்ப்பு கண்ணி வெடிகள்

  • இந்த 'நிபுண்' கண்ணி வெடிகள், தற்போதுள்ள கண்ணி வெடிகளை விட அதிக சக்தி வாய்ந்ததாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதால், எல்லையில் உள்ள படையினருக்கு வழங்கப் படும் பாதுகாப்பை இது மேலும் மேம்படுத்தும்.

தரையிறங்கும் வகையிலான தாக்குதல் கலம்

  • தரையிறங்கும் வகையிலான தாக்குதல் கலங்கள் என்ற இந்தப் புதிய படகுகளில், மேம்பட்ட கண்காணிப்புக் கருவிகள் மற்றும் இதரப் பிற உபகரணங்களுடன் பொருத்தப் பட்டுள்ளன.
  • கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் சோ ஏரியின் பகுதிகளில் கடுமையான கண்காணிப்புப் பணியில் இவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
  • போர் நடவடிக்கைகளில் வீரர்களை ஏற்றிச் செல்வதற்கானப் படகுகளுக்கு மாற்றாக இது விளங்கும்.
  • இந்த இலகுரக தாக்குதல் தாங்கு கலங்கள் மூலம் 35 வீரர்களை ஏற்றிச் செல்ல முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்