2022-23 ஆம் நிதியாண்டு முதல் 2026-27 ஆம் நிதியாண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு “புதிய இந்தியா கல்வியறிவுத் திட்டத்தினை” (NILP) இந்திய அரசாங்கம் தொடங்கியுள்ளது.
இது ஒரு மத்திய அரசின் நிதியுதவி பெறும் ஒரு திட்டமாகும்.
இந்தத் திட்டம் ஆனது 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 5.00 கோடி கல்வி அறிவு இல்லாதவர்களை இத்திட்டத்தினுள் கொண்டு வருவதை இலக்காகக் கொண்டு உள்ளது.
இத்திட்டமானது ஐந்து கூறுகளைக் கொண்டுள்ளது:
அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் அறிவு,
முக்கிய வாழ்வியல் திறன்கள்,
தொழில் திறன் மேம்பாடு,
அடிப்படைக் கல்வி மற்றும்
தொடர் கல்வி.
இந்தத் திட்டமானது தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதோடு மட்டும் அல்லாமல் இது முக்கியமாக ஆன்லைன் முறையில் செயல்படுத்தப் படுகிறது.
கற்பித்தல் சார்ந்த கற்றல் குறிப்பேடுகள் மற்றும் வளங்கள் ஆகியவை NCERT அமைப்பின் DIKSHA இணைய தளத்தில் கிடைக்கப் பெற்றுள்ளதோடு இவற்றினைக் கைபேசிச் செயலிகள் மூலமும் அணுகலாம்.