TNPSC Thervupettagam

புதிய இமயமலைத் தாவரம் - இம்பேடியன்ஸ் நிம்ஸ்புர்ஜாய்

August 22 , 2026 2 days 60 0
  • ஒரு புதிய இமயமலைப் பூக்கும் தாவரத்திற்கு நேபாள மலையேறுபவரான நிர்மல் நிம்ஸ்டாய் புர்ஜாவின் பெயரால் 'இம்பேடியன்ஸ் நிம்ஸ்புர்ஜாய்' என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இந்தத் தாவரம் 2011 ஆம் ஆண்டில் நேபாளத்தின் மேற்கு மியாக்டி மாவட்டத்தில் முதன்முதலில் காணப்பட்டதுடன், மேலும் ஒரு தசாப்தத்திற்கும் மேலான ஆய்வுக்குப் பிறகு முறைப்படி விவரிக்கப்பட்டுள்ளது.
  • இம்பேடியன்ஸ் நிம்ஸ்புர்ஜாய் தாவரமானது பால்சாமினேசி குடும்பத்தையும், இம்பேடியன்ஸ் பேரினத்தையும் சேர்ந்ததாகும்.
  • இது இமயமலையில் சுமார் 2,800–2,900 மீட்டர் உயரத்தில் ஈரப்பதமான சரிவுகள் மற்றும் வன விளிம்புகளில் வளர்கிறது.
  • நிம்ஸ்டாய் அறக்கட்டளை மூலம் புர்ஜா செய்த மலையேற்றச் சாதனைகள் மற்றும் சுற்றுச்சூழல் பணிகளை கௌரவிக்கும் வகையில் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்