மத்திய இரயில்வே அமைச்சகமானது கர்நாடகாவின் ஹுப்ளியில் இரயில்வேயிற்கான ஒரு பிரத்தியேக அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்து உள்ளது.
இது இரயில்வேயின் பல்வேறு பிரிவுகளின் சிறப்புமிக்க பாரம்பரியத்தைப் பாதுகாப்பதையும் சித்தரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இரயில்வேயின் அனைத்துப் பிரிவுகளிலும் மேம்படுத்தப்பட்ட அமைப்புகளின் படிப்படியான பரிணாம வளர்ச்சியைக் காட்சிப் படுத்துகின்றது.
வட கர்நாடகாவில் அமைந்துள்ள இதே வகையைச் சேர்ந்த முதலாவது அருங்காட்சியகம் இதுவாகும். கர்நாடகாவின் மைசூரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இரயில்வே அருங்காட்சியகத்திற்குப் பிறகு தென்மேற்கு இரயில்வே மண்டலத்தில் அமைந்த 2வது அருங்காட்சியகம் இதுவாகும்.