ஐரோப்பிய சபையானது, 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதியன்று ஐரோப்பிய ஒன்றியம்-இந்திய உத்தி சார் செயல்பாட்டு நிரலை அங்கீகரித்தது.
செயல்பாட்டு நிரல் ஆனது செழுமை மற்றும் நிலைத்தன்மை, தொழில்நுட்பம் மற்றும் புதுமை, காவல் மற்றும் பாதுகாப்பு, இணைப்பு மற்றும் உலகளாவியப் பிரச்சினைகள் மற்றும் நடவடிக்கைகளை செயல்படுத்துதல் ஆகிய ஐந்து முன்னுரிமைப் பிரிவுகளை அடையாளம் காட்டுகிறது.
இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) 1962 ஆம் ஆண்டில் அரசுமுறை உறவுகளை ஏற்படுத்தி 2004 ஆம் ஆண்டில் ஓர் உத்தி சார் கூட்டாண்மையாக மேம்படுத்தப்பட்டன.
இருதரப்பு வர்த்தகம் ஆனது 2024 ஆம் ஆண்டில் 120 பில்லியன் யூரோ மதிப்பினை எட்டியது, 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்தியாவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டு மொத்த அந்நிய நேரடி முதலீடு 107.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.