TNPSC Thervupettagam

புதிய உருகிய திரவக் கோள் வகை

March 21 , 2026 2 days 46 0
  • ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி அறிவியலாளர்கள் புதிய வகை உருகிய திரவப் புறக்கோள்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தக் கோள்கள் பாறை கிரகங்களோ அல்லது நீர் உலகங்களோ அல்ல, மாறாக உருகிய மாக்மா குழம்பால் சூழப்பட்ட உலகளாவிய கடல்களைக் கொண்டுள்ளன.
  • பூமியிலிருந்து சுமார் 35 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள L 98-59 d என்ற கோள் இதற்கு ஒரு உதாரணமாகும் என்பதோடு இதன் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 1,900°C என்ற மிக அதிக அளவில் உள்ளது.
  • இது ஹைட்ரஜன் சல்பைடு வாயு நிறைந்த மிகவும் அடர்த்தியான வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது என்பதோடு இது ஒரு வலுவான பசுமை இல்ல விளைவையும் தீவிர நிலைமைகளையும் உருவாக்குகிறது.
  • இந்தக் கண்டுபிடிப்பு உருகிய சிலிகேட் பொருட்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் கோள்களின் மூன்றாவது வகையை அறிமுகப்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்