G7 அமைப்பின் உறுப்பினர் நாடுகள் ஒரு புதிய "side-by-side" (அந்த நாட்டின் சொந்த வரி அமைப்பு மற்றும் உலகளாவிய வரி அமைப்பினையும் ஒரே நேரத்தில் பின்பற்றல்) என்ற உலகளாவிய வரி முறையை ஒப்புக் கொண்டுள்ளன.
அமெரிக்க மற்றும் ஐக்கியப் பேரரசு நிறுவனங்களுக்கு கூடுதலான ஒரு உலகளாவிய குறைந்தபட்ச வரியிலிருந்து (15%) விலக்கு அளிக்கப்படும்.
அமெரிக்க நிறுவனங்கள் தற்போது உள்நாட்டு மற்றும் சர்வதேச இலாபங்களுக்கு அமெரிக்காவில் மட்டுமே வரி செலுத்தும்.
இந்த ஒரு ஒப்பந்தமானது தற்போதுள்ள அமெரிக்க உள்நாட்டுக் குறைந்தபட்ச வரிச் சட்டங்களை அங்கீகரிக்கிறது.
இந்த நடவடிக்கையானது பழைய OECD உலகளாவிய வரித் திட்டத்தின் கீழ் top-up வரி என்ற குறைந்தபட்ச வரி விகிதம் மற்றும் மொத்த வருவாய் மீதான சராசரி வரி விகிதத்திற்கு இடையிலான ஒரு வித்தியாசம் அடிப்படையிலான வரி விதிகளுக்கு ஒரு மாற்றாக உள்ளது.
இந்த ஒப்பந்தத்தினை இறுதி செய்வதற்காக உதவிய சர்ச்சைக்குரிய வரி விதியை (பிரிவு 899) அமெரிக்கா கை விட்டது.