கங்கையின் வெள்ளப்பெருக்கு சமவெளியை மறுவரையறை செய்து, கங்கை நதி (புத்துயிரூட்டல், பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) ஆணையங்கள் ஆணை, 2016-ஐ மத்திய அரசு திருத்தியுள்ளது.
இந்தத் திருத்தம் "கட்டுமானமில்லா மண்டலம்" (construction-free zone) என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, செயல்படும் வெள்ளப்பெருக்கு சமவெளி, ஒழுங்குமுறை மண்டலம் (regulatory zone) மற்றும் எச்சரிக்கை மண்டலம் (warning zone) ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது.
செயல்படும் வெள்ளப்பெருக்கு சமவெளி என்பது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பகுதியாகும்.
ஒழுங்குமுறை மண்டலம் என்பது 5 முதல் 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் வெள்ளத்தை உள்ளடக்கியது, அதே சமயம் எச்சரிக்கை மண்டலம் 25 முதல் 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் வெள்ளத்தை உள்ளடக்கியது.
மாசுபாட்டைக் குறைக்கவும், இயற்கையான நிலத்தடி நீரை பாதுகாக்கவும் கங்கை கரைகள் மற்றும் வெள்ளப்பெருக்கு சமவெளிகள் பராமரிக்கப்பட வேண்டும்.